Home /News /education /

10-ம் வகுப்பில் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளர வேண்டாம்: டிடிவி தினகரன்

10-ம் வகுப்பில் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளர வேண்டாம்: டிடிவி தினகரன்

டிடிவி. தினகரன்

டிடிவி. தினகரன்

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிற, மாநில  மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வு இயக்குநரகம் நடத்தியது. 2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை அரசுத்தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 95.2 சதவிகித மாணவ- மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.3 சதவிகித மாணவர்களும், 97 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

45,338 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்காக ஜூன் மாதத்தில் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடக்க உள்ளது.

இந்நிலையில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிற, மாநில  மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காகவும் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். தேர்ச்சியும் மதிப்பெண்களும் முக்கியம் என்றாலும், அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அடுத்த வாய்ப்பில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய இறையருள் துணை நிற்கட்டும்.



Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 10 th exam result, TTV Dhinakaran

அடுத்த செய்தி