முகப்பு /செய்தி /கல்வி / "உரிய நேரத்தில் உதவிய முதலமைச்சருக்கு நன்றி" - மாணவி எழுதிய உருக்கமான கடிதம்!

"உரிய நேரத்தில் உதவிய முதலமைச்சருக்கு நன்றி" - மாணவி எழுதிய உருக்கமான கடிதம்!

முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவி

முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவி

பயணடைந்த ஒரு துறையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவராக - பயனடைந்த மாணவி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முந்தைய கல்வி நிறுவனத்தில் செலுத்திய கல்விக் கட்டணத்தை, உரிய நேரத்தில் திரும்ப பெற்று உயர்கல்வியைத் தொடரும் மாணவி இராஜேஸ்வரி புகழேந்தியை முதலமைச்சர் இன்று நேரில் சந்தித்தார்.           

பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்பில் சேர்ந்த பிறகு, வேறு படிப்புக்கு மாறும்போது முதலில் சேர்ந்த படிப்புக்குச் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக மாணவி இராஜேஸ்வரி புகழேந்தி முதலமைச்சரிடம் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க  முதலமைச்சர்  உத்தரவிட்டதின் பேரில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் இது விசாரிக்கப்பட்டு, ஒரே வாரத்தில் கல்விக் கட்டணம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் திருச்சி வந்தபோது அவரை சந்தித்த மாணவி, "முதலாம் ஆண்டில் செலுத்திய கல்விக் கட்டணம் திரும்பக் கிடைத்ததால் தற்போது இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணத்தைக் கட்ட பெரிதும் உதவியாக இருந்தது" என்று கூறி, உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவி ராஜேஸ்வரி முதலமைச்சருக்கு எழுதிய நன்றி கடிதத்தில், "நிர்வாக இடர்பாடுகள் காரணமாக கடந்த மாதம் வரை வழங்கப்படாத நிலையில்,  29/12/22 & 06/02/23 தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகையின் போது வேண்டுதல் விண்ணப்பம் வழங்கி கேட்டுக்கொண்ட நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து விசாரித்து ஒரு வார காலத்தில் கல்விக்கட்டணத்தை மாணவ, மாணவிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலை தற்போது பயிலும் கல்விக்கான இரண்டாம் ஆண்டு கட்டணத்தை கட்ட பெரும் உதவியாக அமைந்தது. இதற்கு வழிவகுத்தத தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றி நன்றி நன்றி... பயனடைந்த ஒரு துறையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவராக..." என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin