• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்கினாலும், பெற்றோர்கள் புகார் அளிப்பதில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்கினாலும், பெற்றோர்கள் புகார் அளிப்பதில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதிக கட்டண வசூலி தொடர்பாக வரும் புகார்களின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

  • Share this:
தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுகுறித்து பெற்றோர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் உட்கட்டமைப்பு, கழிவறைகள், மாணவர் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறேன். அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக, பள்ளிகளில் உள்ள கழிவறைகள் குறித்து, முதலமைச்சர் ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூலை முதல் வாரத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது, தனது ஆய்வு தொடர்பாக அவரிடம் விரிவாக தெரிவிக்க  உள்ளதாகவும் கூறிய அமைச்சர், “ அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளிலிருந்து அதிகளவு மாணவர்கள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகிறார்கள். குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில், 1,500 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து,அரசு பள்ளிகளில் இணைந்துள்ளார்கள். அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை இல்லை.  அது பெருமை நிலை” என்றார்.

இதையும் படிங்க:  ஆன்லைன் விளையாட்டால் நண்பர்களிடையே மோதல்- வாலிபர் மண்டை உடைப்பு..

தனியார் பள்ளிகளில் நூறு சதவீதம்  கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நேரடியாக யாரும் புகார்கள் தெரிவிப்பதில்லை என்று கூறிய அமைச்சர், தைரியத்துடன் எந்த தயக்கமும் இல்லாமல் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் படிக்க: கொரோனா கட்டுக்குள் வரும்வரை பள்ளிகள்  திறக்கப்படாது..

அதிக கட்டண வசூலி தொடர்பாக வரும் புகார்களின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு, மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து  முடிவெடுக்கப்படும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: