ஹோம் /நியூஸ் /கல்வி /

Watch Video: கண்கலங்கவைத்த அரசுப் பள்ளி மாணவரின் 'ஒப்பாரி பாடல்' - குவியும் பாராட்டுகள்

Watch Video: கண்கலங்கவைத்த அரசுப் பள்ளி மாணவரின் 'ஒப்பாரி பாடல்' - குவியும் பாராட்டுகள்

கலை திருவிழா

கலை திருவிழா

Govt Schools Kalai Thiruvizha Oppari song trending: சுமார் 1.43 நிமிடம் வரையில் இந்த ஒப்பாரிப் பாடலில், பாடும்  மாணவன் தொனியின் ஆழம் கேட்போரை வியக்க வைக்கிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், அவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிரம்மாண்ட கலைத் திருவிழா  நடத்தி வருகிறது.

இசை, நடனம், பேச்சு, நாடகம், நாட்டுப்புறக் கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

கண்கலங்கவைத்த அரசுப் பள்ளி மாணவரின் 'ஒப்பாரி பாடல்':  

இந்த கலைத் திருவிழாவில், மேலபுலம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடலை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

சுமார் 1.43 நிமிடம் வரையில் இந்த ஒப்பாரிப் பாடலில், பாடும்  மாணவன் தொனியின் ஆழம் வியக்க வைக்கிறது. ஒப்பாரி என்பது புலம்பல் வகை  பாடல்களாகும். சொல்லி சொல்லி அழுகும் ஒரு வகையான மரபு. தமிழ் சமூகத்தில் அது ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது.

தாயை இழந்த ஒருவரின் மனக்கிளர்ச்சி, கையறுநிலை, அன்பு, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக மாணவரின் ஒப்பாரி பாடல் அமைந்துள்ளது.      

இதர படைப்பாற்றல்:

அண்மைக் காலத்தில் இருந்தே, அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்புத் திறன், வாசித்தல் திறன், கற்பனை வளம் போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதில் தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் புதியதோர் உத்வேகம் காணப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Department of School Education, Education