1 சதவிகித தேர்ச்சியைக் கூட தாண்டாத டெட் தேர்வு முடிவுகள்!

”இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்”

news18
Updated: August 22, 2019, 8:42 AM IST
1 சதவிகித தேர்ச்சியைக் கூட தாண்டாத டெட் தேர்வு முடிவுகள்!
கோப்புப்படம்
news18
Updated: August 22, 2019, 8:42 AM IST
சுமார் 5.42 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டு தாள்களிலும் சேர்த்து வெறும் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமைசட்டபடி ஆரம்பம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்க வேண்டும் என்பது அரசின் கட்டாய விதியாகும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தேர்சி பெற முதல் தாளிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வுகளை (TET), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. முதல் மற்றும் 2-ம் தாள் ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.


இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. 2 தாள்களை எழுதிய 5,42,346 பேரில், 5,41,083 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். முதல் தாளில் 915 பேரும், இரண்டாம் தாளில் 348 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரசுபள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் பணிபுரிந்து வரும் 1500 ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்சி பெற்றால் மட்டுமே பணியை தொடர முடியும் என்ற நிலையில், 1500ஆசிரியர்களும் தங்களுடைய தகுதிக்காக இரண்டாம் தாளை எழுதினர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தாள் 2 முடிவின் அடிப்படையில் இவர்களுள் பெரும்பாலோனோர் தேர்ச்சி பெற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

Loading...

1500ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் தேர்சி பெறத் தவறினால் அவர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...