பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

”தேர்வு விவகாரத்தில் வினாத்தாளில் முறைகேடு செய்து 196 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறி தேர்வை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.”

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: August 14, 2019, 9:24 AM IST
  • Share this:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1,33,569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வு விவகாரத்தில் வினாத்தாளில் முறைகேடு செய்து 196 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறி தேர்வை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசின் உத்தரவு சரி தான் என்று தீர்ப்பளித்தார். ஆனால், இதையடுத்து இதே கோரிக்கை தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் விசாரிக்கப்பட்டது. அதில், 196 பேர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசாணை செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த இருவேறு தீர்ப்புகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, “பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து, பணி நியமனம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி இந்த வழக்கில், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றச் சிக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு விரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்