எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

news18
Updated: May 17, 2018, 9:13 PM IST
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
(கோப்பு படம்)
news18
Updated: May 17, 2018, 9:13 PM IST
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச வேலைவாய்ப்பு பயிற்சிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு:

மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தின் சார்பு அலுவலகமான எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் கீழ்கண்ட பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.


1. எஸ்.சி. வகுப்பு, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச மற்றும் உதவித்தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சித் திட்டம்.
பயிற்சி காலம்: 11 மாதங்கள்
உதவித்தொகை : மாதம் ரூ.1,000

Loading...

குறைந்தபட்ச கல்வித்தகுதி : 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் தகுதி.
வயது வரம்பு : 18 முதல் 30 ஆண்டுகள்
பயிற்சிக் கட்டணம் : இலவசம்

2. “O” தரத்துக்கான ஓராண்டு கணினிப் பயிற்சி (மென்பொருள்):
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
உதவித்தொகை : மாதம் ரூ.1,000
குறைந்தபட்ச கல்வித்தகுதி : 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது ஐடிஐ ( பத்தாம் வகுப்புக்குப் பிறகு ஓராண்டு)
வயது வரம்பு : 18 முதல் 30 ஆண்டுகள்
பயிற்சிக் கட்டணம் : இலவசம்

குறிப்பு : விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்: 2018 மே 7ஆம் தேதி
விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் : 2018 ஜூன் 8ஆம் தேதி

மேலும் விபரங்களுக்கு : சார்பு மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி,
எஸ்.சி. / பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு தலைமை இயக்குநர், இலக்கம் 56. சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004. தொலைபேசி : 044-24615112
First published: May 17, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...