முகப்பு /செய்தி /கல்வி / அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி!

காட்சிப் படம்

காட்சிப் படம்

சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவது எளிதாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Last Updated :

NEET, JEE போட்டித் தேர்வுகளுக்கு தயாராகக் கூடிய மாணவர்களுக்கு அரசு சார்பில் உணவு, தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மருத்துவபடிப்பில் சேருவதற்குரிய நீட் தேர்வு, ஐ ஐ டியில் சேருவதற்குரிய JEE தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்சி விகிதம் மிக குறைவு இந்த நிலையை மாற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கும் மேல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், JEE போன்ற போட்டிதேர்வுகளை.

எதிர்கொள்ள முழு மூச்சாக தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கணிதம், இயற்பியல் வேதியியல் உயிர் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சென்னை, சேலம், தருமபுரி,

கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், இராமநாதபுரம்,

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டதிலும் தலா 80 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது .

வெவ்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது ஒரே இடத்தில் தங்கி இச்சிறப்பு வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தங்குவதற்குரிய வசதி மூன்று வேளை உணவு, சிற்றுண்டி ஆகிவையும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

பொதுவாக பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு நன்றாகப் படிக்கும் மாணவர்கள், பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமப்படும் மாணவர்கள் என இருப்பர் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக வகுப்புகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை அங்கு நிலவும். இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இருப்பதால் விரைவாகவும் அதே வேளையில் ஆசிரியர்கள் பல்வேறு வழிமுறைகளில் பாடங்களை நடத்துவது சிறப்பு பயிற்சி வகுப்பின் முக்கிய அம்சமாகும்.

ஓட்டுனராக வேலை செய்யும் தந்தையால் தங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்கு வழியற்ற நிலையில் லட்சக் கணக்கில் செலவழித்து தனியார் பயிற்சி போட்டிதேர்வு மையங்களில் சேர்க்கமுடியாத நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்ப்படுத்தியுள்ள இச்சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதிய நம்பிக்கையை அளிப்பதாக கூறுகிறார் மாணவர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களோடு இணைந்து படிப்பதற்கும் சந்தேகங்களை எளிதாக தீர்த்துக் கொள்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மாணவர்கள். அரசின் இந்த பயிற்சி வகுப்பு நீட், JEE போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உறுதுணையாக அமையும் என்று கூறுகின்றனர்.

Also read... தேர்வு முறைகேடு குறித்து குழு அமைத்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற நடவடிக்கை - சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவு!

சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவது எளிதாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய வகையிலும் பொதுத் தேர்வுக்கும் மாணவர்களை தயார் படுத்தி வருவதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள். பள்ளிக்கல்வித் துறையின் இந்த முயற்சி பெரும் நம்பிக்கை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Also read... பொறியியல் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடப்பாண்டில் ரத்து

top videos

    ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் லட்சங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது என்பது இயலாத காரியம். இப்படியான சூழ்நிலையில் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள இந்த முயற்சி அரசு பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    First published:

    Tags: Jee, Neet Exam