பிற்போக்குத்தனமும் குப்பைகளும் பாடத்தில் சேர்க்கப்படுகிறது: தமுஎகச கண்டனம்

டெல்லி பல்கலைக்கழகம்

இந்துத்துவக் கருத்தியலுக்கு இசைவாக வரலாற்றைத் திரித்து எழுதிய பொய்களையும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களையும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்தும் விதமாக இலக்கியப் பெறுமதியற்று எழுதப்பட்ட குப்பைகளையும் பாடங்களாக திணித்துவருகிறார்கள் என்று தமுஎகச தெரிவித்துள்ளது.

  • Share this:
    டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து  மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி எழுத்துகள் நீக்கம்  செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,  பாடத்திட்டத்தில் பிற்போக்குதனமும் குப்பைகளும் சேர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில், பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவியின் திரௌபதி படைப்பும் நீக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) டெல்லி பல்கலைக்கழகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமுஎகச வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென டில்லி பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளதும்.

    மகா சுவேதாதேவி


    மேலும், “இந்துத்துவாவினர் பாரதிய ஜனதா கட்சியிடமுள்ள ஒன்றிய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கருத்தியலுக்கு இணங்காத வரலாறு அறிவியல் சமூகவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவருகின்றனர். நீக்கப்படும் அந்தப் பாடங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கருத்தியலுக்கு இசைவாக வரலாற்றைத் திரித்து எழுதிய பொய்களையும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களையும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்தும் விதமாக இலக்கியப் பெறுமதியற்று எழுதப்பட்ட குப்பைகளையும் பாடங்களாக திணித்துவருகிறார்கள்.

    இதையும் படிக்க: டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம்


    கல்விப்புலத்தின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்களும் பாடத்திட்டக் குழுக்களும் தமது பொறுப்பிலிருந்து பிறழ்ந்து ஆளும் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் இழிநிலைக்குத் தாழ்ந்துவிடக்கூடாது” என்று தமுஎகச வலியுறுத்தியுள்ளது.

    இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து  எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்னும் டில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது என்றும்  நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடரவேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க: ஆப்கானிலுள்ள இந்தியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

    Published by:Murugesh M
    First published: