TPSC வன சேவை 2020க்கான பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!

திரிபுரா பொது சேவை ஆணையம் (Tripura Public Service Commission (TPSC)) பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை வன சேவை தரம் II பிரிலிம்ஸ் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டது.

திரிபுரா பொது சேவை ஆணையம் (Tripura Public Service Commission (TPSC)) பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை வன சேவை தரம் II பிரிலிம்ஸ் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நம்மில் பலருக்கும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கும். கனவு மட்டும் இருந்தால் போதாது அதற்கான சரியான திட்டமிடலும் சரியான நேரத்தை ஒதுக்கி தேர்வுக்கு தயாரானால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அதிக உழைப்பு, புத்திகூர்மை, நேரம் இது போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகின்றது. இவை அனைத்தும் ஒருங்கே பெற்றால்தான் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். 

அந்த வகையில், திரிபுரா பொது சேவை ஆணையம் (Tripura Public Service Commission (TPSC)) பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை வன சேவை தரம் II பிரிலிம்ஸ் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டது. TPSC வன சேவை 2020 ன் முதனிலை தேர்வை எழுதிய தேர்வர்கள் தேர்வின் முடிவுகளை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tpsc.tripura.gov-ல் பார்த்துக்கொள்ளலாம். 

இந்தத் முதனிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் வருகிற மே 17ம் தேதி நடைபெறும் TPSC வன சேவை 2020 மெயின்ஸ் தேர்வில் கலந்துகொள்ள முடியும். அந்த வகையில் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்களை பின்னரும் ஸ்டெப்ஸ்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்டெப் 1: தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tpsc.tripura.gov.in/ ஐ முதலில் பார்வையிடவும்

ஸ்டெப் 2: 'What’s New' பிரிவில் உள்ள முகப்புப்பக்கத்தில், 'Result of Preliminary Exam of Tripura Forest Service, Grade-II' என்ற தலைப்பை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: TPSC வன சேவை 2020 பிரிலிம்ஸ் தேர்வுகளின் முடிவுகளுடன் ஒரு PDF பைல் திறக்கப்படும்

ஸ்டெப் 4: TPSC வன சேவை 2020 க்கான தேர்வர்கள், தேர்வு முடிவுகளுக்கான பைலில் தங்கள் ரோல் எண் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம். ரோல் எண் இருந்தால், தேர்வர் பிரிலிம்ஸ் தேர்வில் பாஸ் ஆகிவிட்டார் என்று அர்த்தம். 

ஸ்டெப் 5: TPSC வன சேவை 2020 முடிவுகளைப் பதிவிறக்கவும்

ஸ்டெப் 6: முடிவுகளை தேவையென்றால் பிரிண்ட் எடுத்துக்கொள்ளாலாம். எதிர்கால குறிப்புக்காக அதை பாதுகாப்பாக வைக்கவும்

இந்த தேர்வு முடிவுகளை கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்து நேரடியாக பார்க்கலாம்.

https://tpsc.tripura.gov.in/sites/default/files/tfs-090221.pdf

ஜூன் 2020 இல் வெளியிடப்பட்ட TPSC வன சேவை 2020க்கான விளம்பரத்தில் சில ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 23, 2021க்குள் இந்த ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட (self-attested) நகல்களை சமர்ப்பிக்காவிட்டால், TPSC வன சேவை 2020 தேர்வர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும். தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களும் TPSCன் வரவேற்பு கவுண்டரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. TPSC வன சேவை 2020 பிரிலிம்ஸ் தேர்வு 2021 ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. TPSC வன சேவை 2020 க்கான பிரதான தேர்வு அகர்தலாவில் நடைபெறும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: