10,11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர். தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் :
பொதுத் தேர்வு எழுதப்போகும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 10 ஆயிரத்து 308 மற்றும் மாணவிகள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 173 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதவுள்ளனர். அதில் மாணவர்கள் 4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மற்றும் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 87ஆயிரத்து 783 பேர் எழுதுகின்றனர். அதில் மாணவர்கள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 535 மற்றும் மாணவிகள் 4 லட்சத்து 20 ஆயிரத்து 242 பேர் எழுத உள்ளனர்.
இந்த கல்வி ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Public exams, School education department, School students