Home /News /education /

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்: யார் இந்த சாவித்திரபாய் பூலே....

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்: யார் இந்த சாவித்திரபாய் பூலே....

சாவித்திரிபாய் புலே

சாவித்திரிபாய் புலே

"மரபுகள் தூக்கி வீசப்படப் போகிறது ; எழுத படிக்க கற்றுக் கொள்ளுங்கள்; ஆங்கில அன்னை வந்துவிட்டாள்"  - சாவித்திரிபாய் பூலே

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நேரத்தில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரபாய் பூலேவின் பங்களிப்பை நினைவு கூறுவது தவிர்க்க முடியாதது.

19ம் நூற்றாண்டின்  பிற்பகுதியில் (1850 -1900),  பிரெஞ்சுப் புரட்சி விளைவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு வாக்குரிமை, சொத்துரிமை, மறுமணம், கல்வியின்மை போன்ற விசயங்கள் பெரிதும் முன்வைக்கப்பட்டன. அந்த  வகையில், இந்தியாவின் முக்கிய  பெண்ணியவாதியாக சாவித்திரபாய் விளங்குகிறார்.

1.  19ம் நூற்றாண்டில் மராட்டிய மாநிலத்தை பெசாவர் ஆட்சி செய்து வந்தனர். அக்கால கட்டத்தில் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டதாக  (Uma Chakravarty - ‘Rewriting History: the Life and Times of Pandita Ramabai) வரலாற்று ஆசிரியர்கள் வரையறுக்கின்றனர்.

2. 1831ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள விவசாய குடும்பத்தில் சாவித்திரபாய்  பிறந்தார். ஜோதிராவ் புலேவை மணந்தார். நாட்டின் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுவர் ஜோதிராவ் புலே.  நாட்டின் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையில்  ஜோதிராவின் பங்கு அளப்பரியது (அம்பேதகர் தனது புத்தகத்தில் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளார்). 1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சத்யசோதாக் சமாஜம் ( உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார்.

3. 1980களுக்குப் பின்னர் தான் சாவித்திரிபாயின் தனித்துவ பங்களிப்பு உலகத்திற்கு தெரிய வந்தது. 1980ல் வெளியான சாவித்திரிபாய் வாழ்க்கை வரலாறு biography of Savitribai என்ற புத்தகமும், 2008ல் வெளியான Savitribai and India's Conversation on Education என்ற ஆய்வுக் கட்டுரையும் இதில் முக்கிய வகித்தது.

4. தனக்கென ஒரு தனித்துவத்தை நிறுவ முயன்ற அவர், 1848ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.  நாட்டின் முதல் பெண் ஆசிரியராக  மாறினார்.  பின்பு, புனேவில் ஒரு பள்ளியைத் துவங்கி அதில்  தலைமையாசிரியராகப் பணி செய்தார். அதாவது,  நாட்டில்,  உள்நாட்டுக் கல்வி என்றவொன்றே இல்லாத நேரத்தில் பெண்களுக்கென பள்ளிக்கூடம் துவங்கியிருக்கிறார்.

5. மிகச் சிறந்த எழுத்தாளர், வாசிப்பாளர் மற்றும்  கவிதையாளர். 1854ம் ஆண்டு 'Kavya Phule' எனும் கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டார். சாதிய வரம்புகளை மறுதலிப்பதில் பெண் கல்வியின் பங்கு,குழந்தைகள் நலன், தலித் மக்களின் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

6. சத்யசோதாக் சமாஜம், அறிவை மூன்றாவது கண்ணாக பார்க்கிறது. அதாவது, ஓட்டு மொத்த அடக்குமுறையில் இருந்து  விடுதலை பெறுவதற்கான கல்வியை அவர்கள் முன்னெடுத்தனர். 1895ம் ஆண்டும் சாவித்திரிபாயின் மாணவி முக்தாபாய் எழுதிய ‘Mang Maharachya Dukhvisayi’ (மகர் மக்களின் துயரம்) என்ற கட்டுரை, இன்றைய தலித் அரசியலுக்கு முன்னோடியாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற்னர்.

7. சாதிய அடக்குமுறையில் இருந்து முன்னேற  ஆங்கில வழிக் கல்வியை முன்னெடுத்தார்.  அவர், எழுதிய கவிதை தொகுப்பின் மூலம்  இதனை அறிந்து கொள்ளலாம்.

"மரபுகள் தூக்கி வீசப்படப் போகிறது ; எழுத படிக்க கற்றுக் கொள்ளுங்கள்; ஆங்கில அன்னை வந்துவிட்டாள்"

8. நாட்டின் முதல் கலப்பு திருமணத்தை முன்னின்று இவர் நடத்தி   வைத்ததாகவும் கூறப்படுகிறது. தனது நண்பரின் மகளுக்கும், சமூக ஆர்வலர்  சீதாராம் ஜபாஜி ஆல்ஹாட்-ன் கலப்பு திருமணத்தை தனது சொந்த செலவில்  நடத்தி வைத்தியுள்ளார்.

இதையும் வாசிக்க:   எண்ணும் எழுத்தும்... மனதை மகிழ்ச்சியால் நிறைக்கும் வைரல் வீடியோ

9. 1897ல் ஏற்பட்ட பெரும்  பிளேக் நோயில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சாதி பாகுபாடு காரணமாக தலித் மக்களுக்கு  வைத்தியம் மறுக்கப்பட்டது. இதில்,  சாவித்திரிபாயும், சத்யசோதாக் சமாஜம் உறுப்பினர்களும் உயிரை பணயம் வைத்து போராடினார்கள். இப்போராட்டத்தில், சாவித்திரிபாய் மரணமடைந்தார்.

10. போ கல்விக் கல்! அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்! போ, போய் கல்வி பெறு! என்ற அவரின் கவிதை வரிகளை இந்த நாளில் நாம் நினைவுக் கூறுவது மிக பொருத்தமானதாக அமையும்.
Published by:Salanraj R
First published:

Tags: Teacher's Day

அடுத்த செய்தி