முகப்பு /செய்தி /கல்வி / நீட்  சேர்க்கை முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

நீட்  சேர்க்கை முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

நீட் 2022 தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்களின் அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலை (All India Merit List of the qualified candidates ) தேசிய தேர்வு முகமை வெளியிடும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்   சேர்க்கை முறை குறித்த முக்கிய 10 தகவல்களை இங்கே காணலாம்;

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
நீட் 2022 தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்களின் அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலை (All India Merit List of the qualified candidates ) தேசிய தேர்வு முகமை வெளியிடும்.
இந்த அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலைக் கொண்டு - அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats); மத்திய தொகுப்பு இடங்கள் (Central Pool Quota); மாநில தொகுப்பு இடங்கள் (State Government Quota Seats); தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில/நிர்வாக/ வெளிநாட வாழ் இந்தியர்கள் தொகுப்பு இடங்கள் (State/Management/NRI Quota Seats in Private Medical Colleges); மத்திய கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகம்/நிகர்நிலைப் பல்கலைக்கழகம்;எய்ம்ஸ்/ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான  மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு,  மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும்.   
மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% மாநில ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்களின் (Competent Authority) பரிந்துரையின் படி அமையும். அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படி, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்.
அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படியே, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்
மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு மேற்கொள்ளும் கலந்தாய்வில் ( 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகம்)  மத்திய அரசின் இடஓதுக்கீடு முறை பொருந்தும்.
அதேபோன்று, 85% மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடு நடைமுறை பொருந்தும். மேலும்,  அந்தந்த  மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளில்  இடஒதுக்கீடு வகைகளுக்கான இடங்களில்  அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடுச் சட்டங்கள் பொருந்தும்.   
பிஎஸ்சி நர்சிங் படிப்பு (ஹானர்ஸ் ), கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள BVSc மற்றும் AH  படிப்புகளில்   உள்ளிட்ட  படைப்புகளுக்கான  15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடுக்கு நீட் தேர்வு முடிவுகள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் படி, 10% இடங்கள் பொது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு (GEN-EWS) ஒதுக்கப்பட்டுள்ளது. 15% இடங்கள் பட்டியல் பரிவனருக்கும் (SC), 7.5% பட்டியல் பழங்குடியினருக்கும் (51) மற்றும் 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC-NCL) ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 69% ஓடஒதுக்கீடு முறை தொடரும்.
First published:

Tags: Neet, Neet Exam, NEET Result