பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரி படம்

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

 • Share this:
  பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சான்றிதழ்களுடன் தங்கள் பதிவை மேற்கொள்ள இன்றே கடைசி நாளாகும்.

  பி.இ, பி.டெக் படிப்பில் சேர இதுவரை 1லட்சத்து 69ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்துள்ளனர். 1 லட்சத்து 30ஆயிரத்து 812 பேர் தங்கள் ஆவணங்களை முழுமையாக சமர்பித்துள்ளனர். ஆவணங்களை முழுமையாக சமர்ப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சான்றிதழ்களுடன் தங்கள் பதிவை மேற்கொள்ள இன்று இறுதி நாளாகும்.

  பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி (இன்று) வரையில் www.tneaonline.orgwww.tndte.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது. 2020-21ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளன.

  இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

  நேற்று மாலை வரையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்விற்கு 1 லட்சத்து 69 ஆயிரத்து 896 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 38 ஆயிரத்து 732 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 812 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

  Must Read : பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய முடிவு

  இந்நிலையில், மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: