12th Exam | 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் இன்று ஆலோசனை

பள்ளி மாணவிகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறது.

  • Share this:
    12ம் வகுப்பு பொது தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக காலை 11:30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள், கல்வி செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இதில், 12ம் வகுப்பு மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில், தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளன.

    மேலும் இந்த கூட்டத்தில் பகிரப்படும் கருத்துகளை மத்திய அரசு ஆய்வு செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? நடத்துவதாக இருந்தால் எப்படி நடத்துவது? என்பது பற்றி ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் படிக்க...Today Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 23)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: