Home /News /education /

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இன்று 42,024 மாணவர்கள் ஆப்சென்ட்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இன்று 42,024 மாணவர்கள் ஆப்சென்ட்

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் 9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், ஓராண்டு தேர்வு எழுத தடையும், ஆள் மாறாட்டம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி