முகப்பு /செய்தி /கல்வி / TNPSC தேர்வுக்கு தயாராவோருக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

TNPSC தேர்வுக்கு தயாராவோருக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மாநில குடிமை பணி அலுவலர்களுக்கு இடைக்கால பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் - தமிழக அரசு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டிஎன்பிஎஸ்சி, டெட் மற்றும் வரவிருக்கும் இதர போட்டித் தேர்வுகளுக்கு எளிமையான முறையில் விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்  மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று  நடைபெற்றது. இதில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  

முதலாவதாக, அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள், ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க - திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!

இரண்டாவதாக, ஆய்வுக் குழுக்களால் இணைய வழியில் துறை அலுவலர்களுக்கு முன்னோடி குறுகிய மற்றும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.  

இதையும் படிங்க - ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் என்ன? 

மூன்றாவதாக, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு சொந்தமான காலியாக உள்ள 18 ஏக்கர் நிலத்திற்கு வேலி அமைத்து சமூக காடு வளர்ப்பு திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக்கப்படும்

நான்காவதாக, மாநில குடிமை பணி அலுவலர்களுக்கு இடைக்கால பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்    என நான்கு முக்கியத் திட்டங்களை அமைச்சர்  அறிவித்தார்.   

முன்னதாக,  அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக  மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். 

First published:

Tags: TET, TN Assembly, TNPSC