ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு எழுதாத 1,500 ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு!
ஆசிரியர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: May 16, 2019, 8:07 AM IST
  • Share this:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியானது. மேலும், தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர், இணையதள பிரச்னை காரணமாக, ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்கு 6 லட்சத்து 4,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8-ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9-ஆம் தேதி 2-ஆம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு எழுதாத 1,500 ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see.. பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதிப் பெயரை குறிப்பிட வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை
Also see..
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்