முகப்பு /செய்தி /கல்வி / ஆசிரியர் தகுதித் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு

TN Tet Exam Paper 2 Hall ticket : பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 முதல் கட்ட ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 2022 மார்ச் 14 ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரையில் பெறப்பட்டது. இந்த தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 14 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. தேர்விற்கு மூன்று நாட்கள் முன்னதாக தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. எந்த தேர்வு மையம் என்பது தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.

இதற்கான  ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுhttp://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: TET, TNTET