ஹோம் /நியூஸ் /கல்வி /

நவம்பர் நடைபெறும் தேர்வுக்கானக் கணினி வழித் தேர்வு மையங்கள் குறைப்பு - TNPSC அறிவிப்பு!

நவம்பர் நடைபெறும் தேர்வுக்கானக் கணினி வழித் தேர்வு மையங்கள் குறைப்பு - TNPSC அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான தேர்வு வரும் நவம்பர் 5 ம் தேதி நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம், உதவி இயக்குநர்‌ பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் அடங்கிய உதவி இயக்குநர் கணினி வழி தேர்வுக்கான கணினி தேர்வு மையங்கள் குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

உதவி இயக்குநருக்கான தேர்வு 05.11.2022 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ சென்னை, கோயம்புத்தூர்‌, மதுரை, சேலம்‌, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும்‌ வேலூர்‌ ஆகிய 07 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களிலிருந்து பெண்கள் தேர்வு எழுத வரும் நிலையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் மட்டும் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர், நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள கணினி தேர்வு மையங்கள் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஆசிரியர்கள் கல்வித் தகுதியில் அனுதாபம், சமரசம் காட்டக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

நிர்வாக காரணங்களால் கணினி தேர்வு மையங்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கையில்‌ மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்கள்:

பழைய மையம் புதிய மையம் 
சென்னை  மற்றும் வேலூர்‌சென்னை (0101)
மதுரை மற்றும் திருநெல்வேலிமதுரை (1001)
கோயம்பத்தூர்‌ மற்றும் சேலம்கோயம்பத்தூர்‌ (0201)
திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளி(2501)

First published:

Tags: Exam, TNPSC