ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 18.09.2021 அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 15.02.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-600 003, தேர்வாணைய சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 28.072022 அன்று நடைபெற உள்ளது. மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் வெளியிடப்பட்டுள்ளது.
ALSO READ | 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை குறைவாக வழங்கிய ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம்
காலிப்பணியிடங்களின் அடிப்படையில் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான
www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள். எழுத்துத்தேர்வில் அவரவர பெற்ற -மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிகக இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.