• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 153 துறைத் தேர்வுகள் தொடர்பாக TNPSC முக்கிய அறிவிப்பு

153 துறைத் தேர்வுகள் தொடர்பாக TNPSC முக்கிய அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய 153 துறை தேர்வுகளுக்கான விடைகள் இணையத்தில் வெளியாகி உள்ள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய 153 துறை தேர்வுகளுக்கான விடைகள் இணையத்தில் வெளியாகி உள்ள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 153 துறைத் தேர்வுகள் கடந்த 16.08.2021 முதல் 27.08.2021 வரை (19.08.2021 முதல் 22.08.2021 நீங்கலாக) கொள்குறிவகை விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.

    இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் 25.09.202 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 16.08.2021 அன்று மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற துறைத் தேர்வுகளுக்கு வருகை புரிந்து தேர்வு எழுத முடியாமல் கையொப்பமிட்டு சென்ற 22 தேர்வுகளுக்குரிய தேர்வுகளுக்கு 30.10.2021 அன்ற மறுதேர்வு நடைபெற்றது. இந்த 22 தேர்வுகளுக்குரிய உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் 03.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் மறுதேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpds@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் மனுக்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: