தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.