Home /News /education /

டி.என்.பி.எஸ்.சி குரூப்-3, 4 : தமிழ் மொழி தகுதித்தாள் பாடத்திட்டம் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-3, 4 : தமிழ் மொழி தகுதித்தாள் பாடத்திட்டம் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி

தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளது.

    முன்னதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற நடைமுறைக்கான புதிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குரூப்-1, 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளியிடப்பட்டது.

    தற்போது மேலும் குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி