அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மே 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு குறிப்பில்,
24-07-2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பனி தேர்வுகள் -IV தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லாப் பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நத்தனத்தில் உள்ள அரசினார் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 200 மணி முதல் 5.00 வரை வாராந்திர வேலை நாட்களில் மூன்று மாத காலம் நடைபெற உள்ளது.
மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நத்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
தகுதி:
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது மற்றும் இதர தகுதிகள் குறித்த விபரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
விண்ணப்பிக்கும் முறை:
பயிற்சி பெற விரும்புவோர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய இணையதனமான http://www.civilservicecoaching.com/ மூலம் 11-05-2022 வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் 24.07.2012 அன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பத்திருக்க வேண்டும்.
அழைப்புக் கடிதம்:
அழைப்புக் கடிதம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com இல் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து சேர்க்கையின்போது அவசியம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி
வைக்கப்பட மாட்டாது.
TNPSC Current Affairs 4: பொது அறிவுப் பிரிவில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
தெரிவு செய்யும் முறை:
பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சி அழைக்கப்படுவர்.
உணவு மற்றும் தங்கும் வசதிகள் இப்பயிற்சி மையங்களில் இல்லை.
வகுப்பு நேரம்:
மாணவர்கள் பயிற்சிக்கு தினமும் வந்து செல்லும் வகையில் பிற்பகல் 02.00 முதல் 05.00 வரை வாராந்திர வேலை நாட்களில் மட்டும் நடைபெறும் பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது.
வருகைப்பதிவு மிகவும் அவசியம்
பயிற்சி சேர்க்கை இடஒதுக்கீடு:
இனம் | ஒதுக்கீடு விபரம் |
பொது | 31% |
பிற்படுத்தப் பட்டோர் | 26.5% |
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் | 3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் | 20% |
ஆதிதிராவிடர் | 15% |
அருந்ததியர் | 3% |
பழங்குடியினர் | 1% |
மொத்தம் | 100% |
மேலும் விபரங்களுக்கு, இப்பயிற்சி மைய மின்னஞ்சல் முகவரியை ceccchennai@gmail.com அணுகலாம். 044-24621475/24621909 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு civil service coaching
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Competitive Examinations Coaching Cenre
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.