TNPSC Group 4 தேர்வு விடைகள் வெளியானது...!

TNPSC Group 4 Exam Answer Key | குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

news18
Updated: September 12, 2019, 10:14 AM IST
TNPSC Group 4 தேர்வு விடைகள் வெளியானது...!
மாதிரிப் படம்
news18
Updated: September 12, 2019, 10:14 AM IST
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 1-ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. வி.ஏ.ஓ, தட்டச்சர், இளநிலை உதவியாளர் என்று சுமார் 6 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்.

தேர்வில் சில கேள்விகள் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில், அதுதொடர்பாக ஆய்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி ஒரு குழுவை அமைத்தது.


இந்நிலையில், குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளுக்கான விடைத்தொகுதிகள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.

விடைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க...

Loading...

குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்க..

 





First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...