டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது - தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

TNPSC Group 4 Exam | தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட் மற்றும் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று தேர்வாணயம் அறிவுறுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது - தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 1, 2019, 8:38 AM IST
  • Share this:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு , தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலகர் பணியிடங்களுக்குமான குரூப் 4 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு தொடங் கும் தேர்வு நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.  விஏஓ உள்ளிட்ட மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.


பத்தாம் வகுப்பு தகுதியாகக் கொண்டு நடைபெறும் இந்த தேர்வில் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட் மற்றும் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று தேர்வாணயம் அறிவுறுத்தியுள்ளது.

மோதிரம், கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளுக்கும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Loading...

செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை தேர்வர்கள் அறைக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அதற்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: September 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...