ஹோம் /நியூஸ் /கல்வி /

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: தேர்வர்கள் அதிர்ச்சி.. விளக்கம் கொடுத்த TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: தேர்வர்கள் அதிர்ச்சி.. விளக்கம் கொடுத்த TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023ம் ஆண்டு அட்டவனையிலிருந்து குரூப் 1 தேர்வு நீக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு TNPSC தேர்வாணையம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம், 2023 ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை (Annual Recruitment Planner) சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வு அட்டவணையில் , குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளியிடப்படும் என்றும் தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. லட்சக்கணக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இந்த தேர்வு திட்டம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளை அதிகம் பாதிக்கப்படுவார்கள், மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். காலியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் மக்கள்நலத் திட்டங்களையும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையில் குரூப் 1 தேர்வு சேர்க்கப்பட்ட நிலையில் குரூப் 1 தேர்வு நீக்கப்பட்டதாக நேற்று வெளியான தகவல்களை TNPSC மறுத்துள்ளது.

2022ம் ஆண்டு ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வுகளில் கூடுதல் தேர்வுகள் மட்டுமே சேர்க்கப்பட்டதாகவும் திருத்தப்பட்ட அட்டவணையில் குரூப் 1 தேர்வு நீக்கப்படவில்லை எனவும் TNPSC தெளிவுப்படுத்தியுள்ளது.

First published:

Tags: Education, Group 1, Group Exams, TNPSC