Home /News /education /

TNPSC குரூப் 1 தேர்வு: 92 காலியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

TNPSC குரூப் 1 தேர்வு: 92 காலியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 தேர்வு

குரூப் 1 தேர்வு

TNPSC Group1 : வரும் 27 முதல் 29-ம் தேதி வரை தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின், அதை மேற்கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.

    அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

    ALSO READ | அதிக சர்க்கரை.. சுவாச குழாயில் தொற்று.. மாரடைப்பு.. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன? - முழு ரிப்போர்ட்

    இந்நிலையில் 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Group 1, TNPSC

    அடுத்த செய்தி