TNPSC Exam Tentative Keys Released | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி ) மே மாதம் 2022ம் ஆண்டு துறைத் தேர்விற்கான கொள்குறிவகைத் தேர்வின் உத்தேச விடைகள் TNPSC அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் உத்தேச விடைகளை அதற்கான இணையதள பக்கத்தில் சென்று காணலாம்.
அறிவிக்கை எண். 612/2022, நாள்: 04.04.2022 – இன் படி அறிவிக்கப்பட்ட 151 துறைத் தேர்வுகள் கடந்த 06.06.2022 முதல் 14.06.2022 வரை கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த இணைப்பில் கொள்குறி வகை தேர்வின் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஏதேனும் மறுப்பு இருந்தால் தேர்வு ஆணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 29.6.2022 முதல் 5.7.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.