TNPSC Exam : கல்வி தொலைக்காட்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் - அலைவரிசை எண் வெளியீடு
TNPSC Exam : கல்வி தொலைக்காட்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் - அலைவரிசை எண் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TNPSC Exam : கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பார்த்து பயன்பெற, டிடிஎச் / கேபிள் அலைவரிசை எண்களை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பார்த்து பயன்பெற, டிடிஎச் / கேபிள் அலைவரிசை எண்களை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 20.03.2022-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள். ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சியின் அலை வரிசை எண்கள் பின்வருமாறு.
ஏர்டெல் DTH
821
சன் DTH
33
TATA SKY DTH
1554
VIDEOCON d2h
597
TAC TV
200
TCCL
200
VK DIGITAL-
55
AKSHAYA
17
SCV
98
GTPL
99
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் இக்கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.