தேர்வு நடத்தும் முறையில் மாற்றம் கொண்டு வருகிறது டிஎன்பிஎஸ்சி

news18
Updated: July 11, 2018, 8:12 PM IST
தேர்வு நடத்தும் முறையில் மாற்றம் கொண்டு வருகிறது டிஎன்பிஎஸ்சி
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 8:12 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளில், குலுக்கல் முறையில் இனி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் என  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடத்தும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக எழுத்து தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வுகளிலும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு டிஎன்பிஎஸ்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் போது பல்வேறு தேர்வுக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வுக் குழுக்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தங்களுக்கு ஆதரவாக உள்ள   தேர்வுக் குழுக்களிடம் தேர்வாளர்கள் அனுப்பப்படுவதாகவும் அண்மையில் குற்றசாட்டு எழுந்தது.

சமீபத்தில் நடந்த குரூப் 1 தேர்வு நேர்காணலில் கூட, சிலருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  அதனால், குலுக்கல் முறையில் இனி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் என டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம்,  முன்கூட்டியே திட்டமிட்டு நடைபெறும் முறைகேடுகள் குறையும் எனவும்,  வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  விரைவில் இந்த முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...