2022-23 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை/அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாநிலத்தில், கடந்த 22.06.2022 முதல் தமிழ்நாடு அரசு கலை/அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக பெறப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு கூடுதலான மாணவர்கள் கலை/அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்திய தரவுகள் படி, சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 3.30 லட்சம் பேர் விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்துள்ளதாகவும், 2.90 லட்சம் பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதற்கான கால அவகாசம் 10.7.2022 என்று அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், TNEA-ன் கால அவகாசம் சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 92.71 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து இன்றுடன் ஐந்து நாட்கள் முடிவடைவதால், 2022 - 2023 கல்வியாண்டிற்கான கலை/அறிவியல் விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது.
இதையும் வாசிக்க:
தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்பாத பட்டதாரிகள்..
2022 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை இணையதளம் மூலம் நடைபெறுகிறது. இதற்கான இணையதளம் www.tngasa.in ஆகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்குள் (27/07/2022) ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவில் பதிவேற்றம் செய்யுமாறு tngasa கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் வாசிக்க: பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.