Home /News /education /

தமிழ்நாடு மின் வாரியத் துறை தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரியத் துறை தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரியத் துறை

தமிழ்நாடு மின் வாரியத் துறை

TNEB துறைத் தேர்வு வரும் 27.11.2021 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா 2ம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, கணக்கு அதிகாரி, Internal Audit Officer, Subordainat Officer உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவிருந்த நிலையில் கொரோனா 2ம் அலையின் காரணமாக அத்தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி வரும் 27.11.2021 அன்று தேர்வு நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 16.11.2021 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    TANGEDCO மற்றும் TANTRANSCO ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்விற்கு ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி வரி ரூ.90 கட்டணமாக செலுத்த வேண்டும். 03.11.2021 தேதிக்குள் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும். TNEB துறைத் தேர்வு வரும் 27.11.2021 அன்று நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 16.11.2021 அன்று வெளியிடப்படும்.

    விண்ணப்பதாரர்கள் http://www.tnebltd.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 30.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
    இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnebltd.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: News On Instagram, TNEB

    அடுத்த செய்தி