பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!

அண்ணா பல்கலைகழகத்தில் 6-ம் தேதி முதல் 11 வரை பொறியியல் கவுன்சலிங் உதவி மையங்களில் சான்றிதழ் சரிபாக்கும் பணி நடைபெறவுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: June 3, 2019, 8:17 AM IST
  • Share this:
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சம மதிப்பெண் எடுத்தவர்களுக்குள் முன்னுரிமை வழங்கும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்காக, கடந்த மே 2 முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இணையதள வசதி இல்லாதவர்களுக்கு 42 பொறியியல் கவுன்சலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில், மே 31 வரை ஒரு லட்சத்து 33,000-கும்  மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையிலை, ஒரே மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்துவதற்கான ரேண்டம் எண், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது.


மேலும், வருகின்ற 6-ம் தேதி முதல் 11 வரை பொறியியல் கவுன்சலிங் உதவி மையங்களில் சான்றிதழ் சரிபாக்கும் பணி நடைபெறவுள்ளது.

பின்னர், மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் 17-ஆம் தேதி வெளியாகிறது.

அதை தொடர்ந்து 20-ம் தேதி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 3-ல் தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலான கவுன்சலிங்கும் தொடங்குகிறது.
கோப்புப் படம்


ரேண்டம் எண் என்றால் என்ன?

பொறியியல் கலந்தாய்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது.

அதன்படி, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிலும், ஒரே மாதிரி இருந்தால் இயற்பியலும், அடுத்தபடியாக வேதியியல் பாடமும் எடுத்துக்கொள்ளப்படும்.

3 பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் இருந்தால் பிறந்த தேதியின் அடிப்படையில் வயது மூத்த மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவை அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

Also see... அடுத்த 5 நாட்களுக்கு அனல் வெப்பக்காற்று வீசக்கூடும்! வானிலை ஆய்வு மையம்

Also see... 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்