Home /News /education /

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

பொதுப்பிரிவு கலந்தாய்வு

பொதுப்பிரிவு கலந்தாய்வு

TNEA Counselling : மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சம் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது.



    அதை தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் கலந்தாய்வு தொடங்கும் என்றும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Engineering, Engineering counselling

    அடுத்த செய்தி