Home /News /education /

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

பொது பிரிவு, தொழில்பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு வரும்  25ம் முதல் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 25ம் முதல் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இந்த கல்வியாண்டிற்கான பொறியியல் (BE/B.tech.,) பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 27ம் தேதி வரை பெறப்பட்டது. கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்களுக்கான இரண்டு கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு இன்றுடன் முடிவடைகிறது.

    முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் போன்ற சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஆகஸ்ட் 16 முதல் 18ம் தேதி வரை முதலில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அக்டோபர் 14ம்  தேதி வரை  நடைபெறும் வரை என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால்,சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வர தாமதமானாதால், பொறியியல் கலந்தாய்வு செயல்முறையில் சிக்கல்கள் எழுந்தன. உதாரணமாக,  சமவாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை. இதனால், திட்டமிட்டப்படி களந்தாய்வு நடைபெறுமா? என்ற பெருங்குழப்பத்தில் மாணவர்கள் இருந்து வந்தனர்.

    இதையும் வாசிக்க: புதிதாக 6 மாத சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

    சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 20 முதல் 23ம் தேதி வரையும், பொது பிரிவு, தொழில்பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு வரும்  25ம் முதல் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திட்டமிட்டப்படி  சிபிஎஸ்இ  12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபங்கள் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவலைகொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Engineering counselling

    அடுத்த செய்தி