கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 5 கல்வியாண்டின் கட் ஆப் மதிப்பெண்கள்/ மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் போன்ற குறிகாட்டிகளுடன் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கட் ஆப் மதிப்பெண்கள்
கல்லூரி | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | சராசரி | மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் |
அண்ணா பல்கலைக்கழக வளாகம் | 199.00 | 198.25 | 198.00 | 199.50 | 199.75 | 198.90 | 1 |
அண்ணா பல்கலைக்கழகம் - எம்ஐடி | 197.18 | 195.00 | 194.50 | 198.00 | 198.75 | 196.69 | 2 |
கோயம்பத்தூர் - பிஎஸ்ஜி கல்லூரி | 197.50 | 193.75 | 194.50 | 198.50 | 199.00 | 196.65 | 3 |
சிவ சுப்ரமணிய நாடார் கல்லூரி | 197.00 | 194.00 | 193.00 | 196.00 | 197.50 | 195.50 | 4 |
கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி | 194.90 | 190.50 | 190.00 | 196.75 | 198.00 | 194.03 | 5 |
மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி | 195.02 | 190.00 | 190.50 | 196.50 | 198.00 | 194.00 | 6 |
கோயம்பத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி | 194.62 | 190.00 | 190.00 | 195.75 | 197.50 | 193.57 | 7 |
கோயம்பத்தூர் - பிஎஸ்ஜி கல்லூரி மற்றும் பயன்பாடு ஆராய்ச்சி | 194.33 | 190.00 | 190.00 | 195.25 | 196.50 | 193.22 | 8 |
சென்னை - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி | 193.79 | 190.00 | 189.00 | 194.00 | 196.25 | 192.61 | 9 |
கோயம்பத்தூர் - குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி | 193.49 | 188.50 | 187.00 | 194.75 | 196.50 | 192.05 | 10 |
தரவரிசையின் முதல் 10 இடங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழகத்தில் 481 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கிட்டத்தட்ட 90% கல்லூரிகள் தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகும். முதல் 10 இடங்களில், 4 தனியார் சுயநிதி கல்லூரிகளும், 3 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தின் மொத்த பொறியியல் கல்வி நிறுவனங்களில், சென்னை, கோயம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 38% பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 நடைபெற்று வருகிறது. எனவே, அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள TNEA - COMPUTER SCIENCE (OC) CUT OFF DETAILS (FOR 5 YEARS - (2017 - 2021))- COLLEGE WISE தரவரிசைப் பட்டியலை பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Education, Engineering, Engineering counselling