முகப்பு /செய்தி /கல்வி / TNEA Counselling 2022: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது; இதர மாணவர்களுக்கு எப்போது?

TNEA Counselling 2022: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது; இதர மாணவர்களுக்கு எப்போது?

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நேரடியாக தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விளையாட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 3093 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் நாளொன்றுக்கு 300 மாணவர்கள் வீதம் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) உதவியுடன் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சரிபார்க்கப்படும்.  இதர மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத  மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இதன் மூலம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் நடப்பாண்டு முதல் குறையும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Anna University, College Admission, Education, Engineering counselling