Home /News /education /

பொறியியல் மாணவர் சேர்க்கை  தரவரிசைப் பட்டியல்: நாளை மறுநாள் வெளியாகிறது

பொறியியல் மாணவர் சேர்க்கை  தரவரிசைப் பட்டியல்: நாளை மறுநாள் வெளியாகிறது

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

Engineering counselling Rank list: தமிழ்நாடு பொறியியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்விற்கு இந்தாண்டு சுமார் 2,11,115  விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2022 கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 16) வெளியாகிறது.

    பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்விற்கு இந்தாண்டு சுமார் 2,11,115  விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.இதில், 1,67,387  விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.  1,56,214 விண்ணப்பங்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள்  ஒப்படைத்த இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளரை முறையாக  2022 பொறியியல் மாணவர்  சேர்க்கை (TNEA 2022) நடத்தப்படுகிறது.

    2022-23 கல்வியாண்டில், பொறியியல் பட்டயப் படிப்பிற்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட  இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளன. இதில் 1.95 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ளன. இதில், 55-60% இடங்கள் (கிட்டத்தட்ட 90,000 இடங்கள்) அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடங்களும், இதர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

    எனவே, வரும் 25ம் தேதி தொடங்கும் பொது கலந்தாய்வில் பங்கேற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு இடங்கள் உறுதி செய்யப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.

    இதையும் வாசிக்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மருத்துவக் கல்வி இயக்ககம்

    கலந்தாய்வு அட்டவணை: 

    ஆகஸ்ட் 16- தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது

    ஆகஸ்ட் 16 முதல் 23 வரை  - சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு)

    ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரை - பொதுக் கலந்தாய்வு

    அக்டோபர் 22 முதல் 23 வரை - துணைக் கலந்தாய்வு (Supplementary Counselling)

    அக்டோபர் 24:  எஸ்.சி. ஏ காலியிடம் எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு

    அக்டோபர் 24: கலந்தாய்வு நிறைவுறுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Engineering counselling

    அடுத்த செய்தி