Home /News /education /

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Agricultural University (School of Post Graduate Studies) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் இனப்பெருக்கம்  உள்ளிட்ட 32 துறைகளுக்கும், 28 ஆராய்ச்சி படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    முக்கியமான நாட்கள்: 



































    விவரங்கள் நாட்கள் 
    TNAU இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்27.06.2022
    விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்08.08.2022 ( நள்ளிரவு 12 மணி வரை )
    நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும்11.08.2022
    மாதிரி மற்றும் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்27.08.2022
    தகுதிப் பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாள்செப்டம்பர் 2வது வாரம் 2022
    சேர்க்கை மற்றும் கட்டணம் செலுத்தசெப்டம்பர் 3வது வாரம் 2022
    மழைக்கால செமஸ்டர் பாடத்துக்கு பதிவு செய்யசெப்டம்பர் 4வது வாரம், 2022

    இதற்கான இணையதள முகவரி  : https://admissionsatpgschool.tnau.ac.in/

    இதையும் வாசிக்க11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே 

    இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்,  இளம்நிலை/எம்எஸ்சி/எம்.டெக் பட்டதாரிகள்  தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள்   படிப்பு நிறைவுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Agricultural University (School of Post Graduate Studies) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.

    pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் , 94890 56710 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    DOCTORAL APPLICATION FORM

    MASTERS APPLICATION FORM
    Published by:Salanraj R
    First published:

    Tags: College Admission

    அடுத்த செய்தி