Home /News /education /

நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

இந்தாண்டு இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். மாநிலம்  முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்தாய்வு வசதி மையங்கள் அமைக்கப்படும்

  • Last Updated :
    தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    கடந்தாண்டு, நீட் தேர்வு முடிவுகள்வெளியாவதற்கு முன்பாகவே, தமிழ்நாடு முழுவதும் இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான ஏழரை சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வின் மூலம் 7,876 இடங்கள் என மொத்தம் 95,069  இடங்கள் நிரப்பப்பட்டன.

    இதனையடுத்து, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் கல்லூரி இடஒதுக்கீட்டு ஆணை பெற்ற 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுத்தனர். அதேபோன்று, மாநிலத்தின் முக்கிய அரசு கல்லூரிகளிலும் காலியிடங்கள் உருவானது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில்   உருவான இந்த காலியிடங்களை பாலிடெக்னிக் முடித்த மாணவர்களை கொண்டு பக்கவாட்டுப் ஆட்சேர்ப்பு (Lateral Entry) மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


    இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைசச்சர் க.பொன்முடி, " கடந்தாண்டு மாணவர்களின் காலியிடங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்தது. எனவே, தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும்.இது குறித்து,  இம்மாதம் 17-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும். முந்தைய ஆண்டுகளில், இணையதளம் வாயிலாக நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சில குளறுபடிகள் /முறைகேடுகள்  நடைபெற்றது.  ஆனால், கடந்தாண்டு அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் குளறுபடிகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

    பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனா உளைச்சலைக் குறைக்கும் வகையில், இந்தாண்டு இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். மாநிலம்  முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்தாய்வு வசதி மையங்கள் அமைக்கப்படும். மாணவர்களுக்குத் தகவல் அளிப்பது, வழிகாட்டுவது போன்ற உதவிகளை இம்மையங்கள் செய்து கொடுக்கும்" என்று தெரிவித்தார்.

    நீட் தேர்வு: 

    2022 நீட் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி வரை .

    முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும், நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த 5ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு இம்மாதம் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் 23ம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Neet Exam

    அடுத்த செய்தி