முகப்பு /செய்தி /கல்வி / கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு விண்ணப்பம் குறைவு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு விண்ணப்பம் குறைவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

குறிப்பாக கால்நடை மருத்துவம் சார்ந்த பி.டெக் உணவுத்தொழில்நுட்பம்,கோழியின ஆராய்சி தொழில்நுட்பம் உள்ளிட்டபடிப்புகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்தில் 7அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக 408 பி.வி எஸ்.சி படிப்புகளுக்கான  இடங்களும், பி.டெக் படிப்புகளுக்கு 95 இடங்களும் உள்ளன. அக்டோபர் 3ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.

இந்த ஆண்டு பிவிஎஸ்சி  படிப்பிற்கு 13ஆயிரத்து 470 மாணவர்களும், பிடெக் படிப்புக்கு 2744 பேரும் என மொத்தம் இந்த ஆண்டு 16,214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த 2020ம் ஆண்டு 15ஆயிரத்து 580 பேரும், கடந்த 2021ம்  ஆண்டில் மொத்தம் 18,760 விண்ணப்பங்களும் பெறப்பட்ட நிலையில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள் பி வி எஸ் சி கால்நடை மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. எனினும், அது சார்ந்த படிப்புகளாக உள்ள கோழியினை ஆராய்ச்சி தொழில்நுட்ப படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இல்லை என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.

இதையும் வாசிக்கஎம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

மேலும், 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு பயிலும் ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி சேருகின்ற பொழுது  பொறியியல் படிப்பையும் கலை அறிவியல் படிப்பையும் அதிகளவு விரும்புவதால் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

First published:

Tags: College Admission