TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கடந்த 2021 ஆம் சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் பணி நியமனத்தின்போது வயதை கருத்தில் கொண்டு பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் வாசிக்க: 205 தொகுப்பூதியப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்வது மனிதாபிமற்ற செயல்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தை TNTET தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசாணை எண். 149:
இந்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (60% வெயிட்டேஜ் ), தேர்வர்கள் பெற்ற கல்வி தொகுதிக்கான மதிப்பெண்கள் அடிப்படையிலும் (40% வெயிட்டேஜ்) அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நியமனத்தின்போது பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் தற்போது தேர்ச்சிப் பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில் சமமற்ற சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் வாசிக்க: எஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கென தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ முயற்சிகள் சில
எனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் நியமனங்கள் பெற முடியாத இதர தேர்வர்களின் மனச் சுமையை குறைக்கும் பொருட்டு, டெட் தேர்வை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தனித் தேர்வாகவும், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அதற்கென போட்டித் தேர்வை (Competitive Examination - டிஎன்பிஎஸ்சி தேர்வைப் போன்று) நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது. கடந்த 2018ம் ஆண்டு, இதற்கான அரசாணையும் (எண். 149) வெளியானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fasting Protest, Govt teachers, School Teacher, TNTET