Home /News /education /

மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Medical College Admission | ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்கள் பெறப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்காக, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து, பிற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியானதால், மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

    ALSO READ |  விழுப்புரம் : பசி கொடுமையால் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்

    ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்கள் பெறப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக தெரிவித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ma subramanian, MBBS, Medical Admission, Medical colleges

    அடுத்த செய்தி