TN Sports ஆடுகளம் செயலியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டுக் கழக அணிகள் மற்றும் பொதுமக்கள் பதிவு செய்ய, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் "TNSPORTS" ஆடுகளம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியினால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்தான விவரம், பயிற்சி முகாம்கள் நடத்துதல் குறித்தான விவரம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ய்ப்பு ஒதுக்கீடு விவரம் மற்றும் இதர விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெறுபவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே digilocker மூலம் வழங்கப்படும். மேற்படி விவரங்களை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் முதலில் நாம் ஆடுகளம் செயலியில் நம்முடைய சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நம்முடைய சுய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் மேற்கண்ட விவரங்களை பெறலாம். மேற்படி செயலியில் பதிவு செய்ய விழைவோர் https://www.tnsports.org.in/webapp/login.aspx என்ற முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டுக் கழக அணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது விவரங்களை மேற்கண்ட முகவரியில் பதிவு செய்து சுய பயன்பெற வேண்டுமென மயிலாடுதுறை ஆட்சித்தலைவர் லலிதா தெரிவித்துள்ளார்கள்.
TNSPORTS ஆடுகளம் செயலி பதிவு செய்ய ஆரம்பத் தேதி
10/05/2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.