ஹோம் /நியூஸ் /கல்வி /

மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?

மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?

பள்ளிகள் திறப்பு தேதி

பள்ளிகள் திறப்பு தேதி

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்றுடன் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஜனவரி 5 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும். இதர வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஜனவரி 2 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது.

விடுமுறை நாட்களைக் குறித்த முக்கிய அறிவிப்பைப் பள்ளி கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு விடுத்துள்ளனர். நாளை முதல் தொடங்கும் விடுமுறை வழக்கமாக 9 நாட்கள் இருக்கும். அதே போல் இந்த ஆண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடுத்துள்ளனர்.

1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் 2023-ம் ஆண்டில்  ஜனவரி 5 ஆம் நாள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

Also Read : JEE தேர்வு: தமிழக மாணவர்களுக்கு விதிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு கோரிக்கை

சிறப்பு வகுப்பு :

மேலும் அரையாண்டு விடுமுறை தருணத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெறக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளனர். அத்துடன்  வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதிய வருடப் பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பிற்குப் பதில் பொதுத்தேர்வு எதிர்கொள்ள இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Holidays, Tn schools