ஹோம் /நியூஸ் /கல்வி /

சமக்ர சிக்‌ஷா அபியான் நிதி வராததால் பருவமழைக்கு முன் சீரமைக்கப்படாமல் கிடைக்கும் தமிழக பள்ளிகள்

சமக்ர சிக்‌ஷா அபியான் நிதி வராததால் பருவமழைக்கு முன் சீரமைக்கப்படாமல் கிடைக்கும் தமிழக பள்ளிகள்

பள்ளி

பள்ளி

பெரும்பாலான நேரங்களில், நிதியாண்டின் இறுதிக் காலத்தில் நிதி வெளியிடப்படும். இதனால் தேவையற்ற வேலைகளுக்கு நிதி செலவிடப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  சமக்ர சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தில் இருந்து நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில்  பருவமழை தொடங்கும் முன், பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டம் மூலம் 1 முதல் 30 மாணவர்கள் வரை அனுமதிக்கப்படும் பள்ளிகளுக்கு ரூ 10,000 நிதி வழங்குகிறது. 31 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளுக்கு ரூ 25,000 நிதி  வழங்கப்படும்.

  101 முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு நிதியாக  ரூ.50,000 உம்   251 முதல் 500 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு ரூ.75,000 நிதியும் வழங்கப்படும்.

  இந்தியாவில் மேலும் இரண்டு கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் அந்தஸ்து!

  அதேசமயம், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை நிதி வழங்கப்படும்.

  பள்ளி கட்டடங்களில் சிறு பழுது, குடிநீர் வசதி, மின்சார பராமரிப்பு பணிகள், கற்பித்தல் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

  சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்கீழ் ஒரு கல்வியாண்டில் வழங்கப்படும் பணம், அதே கல்வியாண்டிற்குள் செலவழிக்கப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில், நிதியாண்டின் இறுதிக் காலத்தில் நிதி வெளியிடப்படும். இதனால் தேவையற்ற வேலைகளுக்கு நிதி செலவிடப்படுகிறது.

  கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

  திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர்  கூறியதாவது: பெரும்பாலான பள்ளிகளின்  வளர்ச்சிக்கு  இந்த பணம் தேவைப்படுகிறது, பருவமழைக்கு முன்னதாக பள்ளிகளின் அடிப்படை  குறைந்தபட்ச பழுதுபார்க்கும் பணிகள் முடிக்கப்பட வேண்டும். இதில் சிறு பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள், மின் இணைப்புக்கான பழுது, குடிநீர் இணைப்பு, வகுப்பறைகளில் விளக்குகள் மற்றும் சுவிட்சுகள் ஆகியவை அடங்கும்.

  இந்த கல்வியாண்டிற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாத நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் எல்லாம் முடிக்கப்படாமல் அப்படியே நிலுவையில் உள்ளது. இதனால் மழை பெய்யும் நேரத்தில் பள்ளியின் கட்டிடத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Central government, Education, School, Tamilnadu