பள்ளிகள் திறப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை - புதிய மாற்றங்கள் இருப்பதாக தகவல்

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பள்ளிகள் திறப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை - புதிய மாற்றங்கள் இருப்பதாக தகவல்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனோ காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் உறுதியாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி முதற்கட்டமாக 10 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு காலை மற்றும் பிற்பகலில் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்துவது என்பதும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையாக உள்ளது.

மேலும் படிக்க...தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை - ஒரு சவரன் இன்று எவ்வளவு ரூபாய் தெரியுமா?


மேலும், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை கைவிடுவதோடு மார்ச் - ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசிப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading