ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் திறனை வளர்க்க அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் திறனை வளர்க்க அசத்தல் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாணவர்களின்  படிப்பை கடந்து தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது கடந்த காலங்களில் கல்வி இணைச் செயல்பாடுகள் அளித்த முக்கியத்துவத்தை காட்டிலும் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதல் முக்கியத்துவ?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் கல்வி இணை செயல்பாடுகளில் (extra curricular activities) கூடுதல் கவனம் செலுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வெளிநாடு கல்வி சுற்றுலா, பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடல் என பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில், வகுப்பறைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு வாரமும் கலைச் செயல்பாடுகளுக்கு இரண்டு வகுப்புகளை ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலக்கியங் மன்றங்களில் சிறந்து   விளங்கும் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான இலக்கிய  போட்டிகளில் பங்கேற்க செய்து சிறந்து  விளங்கும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லபடுவார்கள்.

மாதத்தில் இரண்டாவது வாரத்தில் இரண்டு வகுப்புகள் வினாடி-வினா போட்டிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட உள்ள ஊஞ்சல் மற்றும் தேன் சிட்டு இதழ்களில் இருந்து வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த விளங்கும்  மாணவர்கள் 20 பேர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதையும் படிங்க: எல்கேஜி விவகாரம்.. கடைசி நேரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

இணையதள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற இணையதளங்களிலிருந்து மாணவர்கள் விலகியிருக்க ஏதுவாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில்  கணினி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் கணினி நிரல் மன்றங்களை துவக்க முடிவு  ந்செய்யப்பட்டுள்ளது.  இதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான பள்ளி புத்தாக்க திட்டத்தின் கீழ் " இளம் கண்டுபிடிப்பாளராக தேர்வு செய்யபட்டு 10 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் சிறார்  திரைப்படங்கள் திரையிடப்பட்டு திரைப்படங்கள் குறித்து மாணவர்கள் சொந்த அனுபவங்களை எழுத வேண்டும். இந்த  அனுபவங்கள் பள்ளிக்கல்வித்துறை துவங்கும் இதழ்களில் பிரசுரிக்கப்படும். அந்த வகையில் சிறந்த பின்னூட்டங்களை எழுதும் 15 மாணவர்கள் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும் படிக்க: போலி செய்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை  உள்ள மாணவர்கள் மாதத்தின்  மூன்றாவது வாரத்தில் பாடப்புத்தகங்களில் உள்ள நாடகங்களில் நடித்து பயிற்சி பெற வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூத்துக் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தினமும் பிற்பகல் 1 முதல் 1:20 வரை மாணவர்கள் சிலர் பருவ இதழ்கள், செய்தித்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.   பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Published by:Murugesh M
First published:

Tags: School, Tn schools